விவசாயி சின்னம் கோரி சீமான் முன்னதாகவே விண்ணப்பிக்க தவறி விட்டு, சின்னம் கிடைக்காததற்கு பா.ஜ.க.வின் மீது பழிபோடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை தெப்பக்குளம் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தினம் ஒரு வார்த்தை, தத்துவம் என சீமான் பேசி வருவதாக விமர்சித்தார்.
பிரதமர் மோடி பற்றி அமைச்சர் உதயநிதி கொச்சையாக பேசினால், தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, பணம் இருப்பவர்களிடம் சோதனை நடத்தப்படுவதாக கூறினார்.