அரியலூர் மாவட்டத்தில் பொய்யாதநல்லூர், இராயபுரம் உள்ளிட்ட 42 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் தரிசனம் செய்தார்.
நாமக்கல் தொகுதி கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து நாமகிரிப்பேட்டையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமாருடன் இணைந்து நடிகர் போஸ் வெங்கட் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து உழவர் சந்தை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் வேட்பாளராக இங்கு நிற்பதாகவும், அவர் தேர்தலுக்குள் வெளியில் வந்து பணியாற்றுவார் என நம்புவதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும் நாகை எம்.பி என்ற நிலையை மாற்ற தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென
கூட்டணி கட்சியினரிடையே ஆதரவு கேட்கும் கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷ் கோவிந்த் கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்துக்கு ஆதரவாக ஓசூரில் கூட்டணி கட்சியினருடன் பேரணியாக சென்று திறந்த வேனில் இருந்தபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் மேற்கொண்டார்.