​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீமான பத்தி பேசாதீங்க... சுட்டுர போறாங்க... அறிக்கையாலே மேகதாது அணையை சீமான் தடுப்பாரா...

Published : Apr 03, 2024 7:55 AM



சீமான பத்தி பேசாதீங்க... சுட்டுர போறாங்க... அறிக்கையாலே மேகதாது அணையை சீமான் தடுப்பாரா...

Apr 03, 2024 7:55 AM

குற்றாலத்தில் தென்காசி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம், நாம் தமிழர் கட்சியின் ஸ்லீப்பர் செல் தான் அண்ணாமலை என சீமான் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தான் அறிக்கை கொடுத்ததால் தான் சசிகலாவிற்கு பெங்களூரில் மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது என்று சீமான் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், அவ்வளவு ஆற்றல் கொண்டவராக இருந்தால் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை அறிக்கை வெளியிட்டு சீமான் தடுக்கலாமே என கூறினார்.