ஆளும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மக்களிடையே எதிர்ப்பு இருப்பது போன்ற நாடகத்தை பா.ஜ.கவினர் திட்டமிட்டு ஆங்காங்கே நடத்துவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலுவிற்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.