நீலகிரி தொகுதியில் 2 முறை எம்பியாக இருந்த ஆ.ராசா, பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை என்று பாஜக வேட்பாளர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
குன்னூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், உதகை, குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் உட்கட்டமைப்பை ஏற்படுத்த திராவிட கட்சிகள் தவறிவிட்டன என்றும் குற்றம்சாட்டினார்.