மதுரை காசிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார்.
அப்போது, பள்ளிவாசல் உள்ள பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவு நீர் தேங்குவதாக பள்ளிவாசல் நிர்வாகி கூறியதையடுத்து, செல்லூர் ராஜு மாநகராட்சி ஆணையரை உடனே தொலைபேசியில் அழைத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.