​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கார்த்தி சிதம்பரத்த பார்க்கனுமுன்னா பாஸ்போர்ட் வேணும்..? பெண்களிடம் நாசுக்காக ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

Published : Apr 02, 2024 6:13 AM

கார்த்தி சிதம்பரத்த பார்க்கனுமுன்னா பாஸ்போர்ட் வேணும்..? பெண்களிடம் நாசுக்காக ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

Apr 02, 2024 6:13 AM

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், இளையான்குடி அடுத்த தாயமங்கலம் கிராமத்தில் பெண்களிடம் வாக்கு சேகரித்தார் .

அப்போது கார்த்தி சிதம்பரத்துக்கு ஓட்டு போட்டால் அவரு லண்டனுக்கு போயிருவாரு , அவர பார்க்கனுமுன்னா பாஸ்போர்ட் வேணும் உங்களுக்கு பாஸ்போர்ட் இருக்கா, நான் கிராமத்துக்காரன் எனக்கு ஓட்டு போடுங்க என்று பவ்வியமாக கேட்டார்

அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் தேவருக்கு தங்கம் தந்தவங்க அம்மா , நான் அம்மாவின் சின்னம் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவேன் என்று கூற, நான் இரட்டை இலை சின்னத்துல தான் நிற்கிறேன்... எனக்கே ஓட்டு போடுங்கன்னு.. கும்பிட்டு குணமா கேட்டுக் கொண்டார் சேவியர் தாஸ்