​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"அடுத்த 10 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் பங்கு முக்கியமனது" - பிரதமர் மோடி உரை

Published : Apr 01, 2024 5:49 PM

"அடுத்த 10 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் பங்கு முக்கியமனது" - பிரதமர் மோடி உரை

Apr 01, 2024 5:49 PM

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உலகின் வலுவான மற்றும் நிலையான வங்கி அமைப்பாக இந்தியாவின் வங்கி அமைப்பு உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

ரிசர்வ் வங்கியின் 90ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று, 40 கிராம் வெள்ளியில் தயாரிக்கப்பட்ட 90 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்.

பின்னர் பேசிய பிரதமர், வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணயப் பரிமாற்றத்தின் புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்துள்ளதாகவும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக மாறியுள்ள யூ.பி.ஐ. மூலம்  ஒவ்வொரு மாதமும் 1200 கோடி பரிவர்த்தனைகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியா வளர்ந்த நாடாக மாறவுள்ள அடுத்த 10 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் பணிகள் மிக முக்கியமானவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.