​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருமகனா இருந்தாலும் அரசியல்ன்னா அடி தான்..! மேடையில் வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் வார்த்தை போர்

Published : Apr 01, 2024 1:04 PM



மருமகனா இருந்தாலும் அரசியல்ன்னா அடி தான்..! மேடையில் வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் வார்த்தை போர்

Apr 01, 2024 1:04 PM

தூத்துக்குடி ஆழ்வார் திருநகரியின் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, 5 ஆண்டுகளாக தாமிரபரணி ஆறு முள்ளுச்செடியாகவே காட்சியளிப்பதாகவும், மழை வெள்ளத்தில் அதிக பாதிப்புக்குள்ளான ஸ்ரீவைகுண்டத்திற்கு திமுக எம்.பி கனிமொழி ஒன்றும் செய்யவில்லை என்றும் பேசினார்.

தான் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் அடுத்தாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில், திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக யார் நின்றாலும் அதற்கு முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். அருகில் இருந்த மாவட்ட செயலாளரும் தாய்மாமனுமான முன்னாள் அமைச்சர் சண்முக நாதன், முதல்ல நீ வெற்றி பெறுவதற்கு ஒழுங்கா செலவு பண்ணு என்று முனுமுனுத்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய சண்முகநாதன், வேட்பாளர் ஆகிய நீங்கள் முதலில் உங்களுக்கு வேட்பாளராக சீட் வாங்கித் தந்தது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ தான் என ஊர் முழுக்க பேசிக் கொண்டிருக்கிறீர்கள் இது நல்லதல்ல உங்களுக்கு சீட்டு தந்தது தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் சீட் தந்தார். இரட்டை இலைக்கு தான் ஓட்டு அதை மறந்து விட வேண்டாம் என்றார்.

மேலும் நீ "ஆனைய கிழிக்க வா" "பூனையை கிழிக்க வா", "ஆற்றை கடலில் விடவா" என தேர்தலில் வெற்றி பெற்று வருவதற்கு முன்பே நடக்கப்போவதை எல்லாம் சிந்திக்க வேண்டாம் என தனது சொந்த மருமகனும், வேட்பாளருமான சிவசாமி வேலுமணியிடம் கடுப்பில் பேசினார் சண்முக நாதன்

முன்னாள் அமைச்சரின் பேச்சை கண்டு அதிர்ந்து போன விரக்தியில் நானும் அதைத்தான் கூறியிருந்தேன் என வேட்பாளர் அருகில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவரிடம் தெரிவித்தார்.

உடனே மீண்டும் கடுப்பான முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் "இந்தா மைக்கை பிடி" என வேட்பாளரான சிவசாமி வேலுமணியிடம் மைக்கை கொடுத்துவிட்டு கடுப்பில் அவரின் இடத்திற்கே சென்று அமர்ந்து கொண்டார்

சொந்த அக்கா மகனா இருந்தாலும் அரசியலில் தன்னை ஓவர் டேக் செய்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த வார்த்தை போர் நடந்ததாக அதிமுக தொண்டர்கள் புலம்பி சென்றனர்...