​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூர், ஈரோடு, நாமக்கல் திமுக & கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

Published : Apr 01, 2024 11:02 AM

கரூர், ஈரோடு, நாமக்கல் திமுக & கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

Apr 01, 2024 11:02 AM

திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து, அதிமுகவும், பாஜகவும், அவதூறு குதிரையில் பயணிப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற தேர்தர் பிரச்சார கூட்டத்தில், ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரம், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்தார்.

இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருவதாக கூறிய மு.க.ஸ்டாலின், எந்த விதமான பாகுபாடுகளும் இல்லாமல், அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  

முன்னதாக, பிரச்சார கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்ததாக, அமைச்சர் முத்துச்சாமியை பாராட்டிய முதலமைச்சர், இங்கு வரமுடியாத கரூர் செந்தில் பாலாஜிக்கும் வாழ்த்துக்கள் என்று கூறினார்.