​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10 ஆண்டுகளாக ஊழலை ஒழிக்க போராடி வருகிறோம்- பிரதமர் மோடி

Published : Apr 01, 2024 10:46 AM

10 ஆண்டுகளாக ஊழலை ஒழிக்க போராடி வருகிறோம்- பிரதமர் மோடி

Apr 01, 2024 10:46 AM

உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் பாஜக வேட்பாளரான ராமாயண நடிகர் அருண் கோயிலை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் கலந்துக் கொண்டனர்.

தமது பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை சாடிய மோடி, தாம் ஊழலுக்கு எதிராகப் போராடி வருவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களிடமே கொண்டு சேர்க்கப்படும் என்று உறுதியளித்த பிரதமர் மோடி தாம் மூன்றாவது முறை ஆட்சியமைப்பதற்கான திட்டங்களை தயாரித்து வைத்திருப்பதாக கூறினார்.

ஆட்சி பொறுப்பேற்று முதல் 100 நாட்களில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்