​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் காங். தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு திரிணாமூல் ஆதரவு

Published : Apr 01, 2024 6:41 AM

டெல்லியில் காங். தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு திரிணாமூல் ஆதரவு

Apr 01, 2024 6:41 AM

மேற்குவங்கத்தில் காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்துவரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்  மம்தா பானர்ஜி காங்கிரசுக்கு அளிக்கும் வாக்குகள் பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள் என கூறியிருக்கிறார்.

காங்கிரசும் மார்க்சிஸ்ட் கட்சியும் மறைமுகமாக பாஜகவுக்கு மறைமுக ஆதரவாக இருப்பதால்  தமது கட்சி இந்த 2 கட்சிகளையும் தன்னந்தனியாக எதிர்ப்பதாக மம்தா கூறினார்.

டெல்லியில் நேற்று இண்டியா கூட்டணி கண்டன கூட்டத்தில் திரிணமுல் எம்.பி தெரிக் ஓ பிரையன் காங்கிரசை ஆதரித்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில், மம்தா பானர்ஜி அதற்கு நேர் எதிரான கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.