​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
என் கொடி பறக்க வேண்டிய இடத்துல... கொடியை அகற்றுவதில் மல்லுக்கட்டிய சிறுத்தைகள்..!

Published : Mar 31, 2024 6:50 PM

என் கொடி பறக்க வேண்டிய இடத்துல... கொடியை அகற்றுவதில் மல்லுக்கட்டிய சிறுத்தைகள்..!

Mar 31, 2024 6:50 PM

பிளாஸ்டிக் நாற்காலி சண்டையை தொடர்ந்து சொந்த கட்சிக் கொடிய நட்டு வைப்பதில் இரு சிறுத்தைகள் மல்லுகட்டிய சம்பவம் வில்லிவாக்கத்தில் அரங்கேறியது

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவை முன்னிட்டு சாலையின் ரெண்டு பக்கமும் திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டு வச்ச கொடிய எடுக்குறதுல தான் இந்த அதகளமான பஞ்சாயத்து.

தன்கிட்ட கேட்காம கொடியை நீ எப்படி எடுக்கலாம்னு சீனியர் சிறுத்தை கேட்க , நம்ம கட்சி கொடியைதான எடுத்தேன் .. மத்தவன் கொடியையா எடுத்தேன் என ஜூனியர் சிறுத்தை சொல்ல ஒரே களேபரம் தான்.

கொடிக்கு வாக்குவாதம் செஞ்ச வி.சி.க கட்சி நிர்வாகிகளை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் சமாதானம் செய்ய முயற்சித்தும் அது முடியாம போக, இப்படி சத்தம்போட்டு சண்டை போடலாமானு அவங்க காட்சிக்காரங்களே சொல்லி ஒருவழியா அனுப்பி வச்சாங்க.