​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூர் முதுநகர் பகுதியில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் பிரசாரம்

Published : Mar 31, 2024 1:34 PM

கடலூர் முதுநகர் பகுதியில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் பிரசாரம்

Mar 31, 2024 1:34 PM

கடலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளரான திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், கடலூர் முதுநகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர், தமது வீடு இடிக்கப்பட்டதாக கூறி கதறி அழுதார்.

அவருக்கு ஆறுதல் கூறிய தங்கர்பச்சான், பிரச்சனைக்கு தீர்வுகாண ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். 

மீன் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடம் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுகொண்டார்.