​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடக்கம்.. காஸா போரில் 32,000 பாலஸ்தீனர்கள், 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழப்பு

Published : Mar 31, 2024 7:21 AM

ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடக்கம்.. காஸா போரில் 32,000 பாலஸ்தீனர்கள், 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழப்பு

Mar 31, 2024 7:21 AM

இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகள் இடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று மீண்டும் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஸாவில் ஹமாஸ் போராளிகளின் பிடியில் உள்ள 130 இஸ்ரேல் பணயக் கைதிகளில் 40 விடுவிப்பதற்கு ஈடாக ஆறு வார கால போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதற்கு கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. போர்நிறுத்தம் மற்றும் காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வாபஸ் என்பதை ஹமாஸ் போராளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், ஹமாஸ் போராளிகள் அழித்தே தீருவோம் என்று இஸ்ரேல் பிரதமரும், ராணுவமும் கூறி வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் போரில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.