​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துரை வைகோ.. அரை வைகோ.. குறை வைகோ.. உதயநிதியையும் விடாமல் விளாசிய விந்தியா..!

Published : Mar 30, 2024 5:45 PM



துரை வைகோ.. அரை வைகோ.. குறை வைகோ.. உதயநிதியையும் விடாமல் விளாசிய விந்தியா..!

Mar 30, 2024 5:45 PM

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து  நடிகையும் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நீச்சல் தெரியாத ஒருவர் ஓட்டைப்  படகில் பயணம் மேற்கொண்ட கதை போன்று தான் வைகோ மற்றும் துரை வைகோ திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக என்று விமர்சித்தார் 

துரைவைகோவை பலி கொடுக்கவே அவரை தி.மு.கவினர் திருச்சியில் வேட்பாளராக நிறுத்தி உள்ளதாக விந்தியா தெரிவித்தார்

தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் உதயநிதி செங்கல்லை தூக்கி காண்பித்து வருவதையும் கடுமையாக விமர்சித்தார்