​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறன் பிரசாரம்

Published : Mar 30, 2024 3:33 PM

மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறன் பிரசாரம்

Mar 30, 2024 3:33 PM

மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு ஆதரவாக சூளை பகுதியில் அமைச்சர் சேகர்பாபு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஆட்சி மோசமாக இருப்பதால் தான் போதை கலாசாரம் அதிகரித்துள்ளதாகவும் அதே சூளை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய சென்னை பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம் கூறினார்.

வட சென்னை மக்களவை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, தண்டையார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தென் சென்னை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.