​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து கடம்பூர் ராஜூ பிரச்சாரம்

Published : Mar 30, 2024 3:06 PM

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து கடம்பூர் ராஜூ பிரச்சாரம்

Mar 30, 2024 3:06 PM

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி  பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது, அதிமுக எந்த கட்சியுடனும் கள்ளக்கூட்டணி வைக்கவில்லை என்றார் அவர். 

மயிலாடுதுறை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின், சீர்காழி அடுத்த மாதானம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொள்ளிடம் பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடைசூழ ம.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன், கிருஷ்ணராயபுரம் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார்.