​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அனைத்து கட்சியினரின் அனல் பறக்கும் பிரச்சாரம்

Published : Mar 30, 2024 1:42 PM

தமிழகத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அனைத்து கட்சியினரின் அனல் பறக்கும் பிரச்சாரம்

Mar 30, 2024 1:42 PM

நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 

அதிமுக கூட்டணி சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சிவனேசனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் காமராஜ் டீக்கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி தொகுதி அ.திமு.க. வேட்பாளர் சிவசாமி வேலுமணியும், அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் வாக்கு சேகரித்தனர்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருடன் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மலைக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் முன்னாள் எம்.பி. ப.குமார் உள்ளிட்டோரும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.