​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி

Published : Mar 30, 2024 12:09 PM



பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி

Mar 30, 2024 12:09 PM

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.

வெள்ளிக்கிழமை இரவு டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மறைந்த நடிகர் முரளியின் சித்தி மகனான டேனியல் பாலாஜிக்கு திருமணம் ஆகவில்லை. கண்தானம் செய்துள்ள டேனியல் பாலாஜியின் உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.