செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கனிமொழி எம்.பி. பிரச்சாரம் செய்தார்.
சிவகாசியில், இண்டியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசு அனைத்து நலத்திட்டங்களையும் மாநில அரசின் சொந்த நிதி மூலம் நிறைவேற்றிவருவதாக கூறினார்.