​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணனுக்கு நாங்க தான் பொன்னாடை போர்த்துவோம்.. பிளாஸ்டிக் சேர்களால் தாக்கிக் கொண்ட சிறுத்தைகள்..!

Published : Mar 30, 2024 6:20 AM



அண்ணனுக்கு நாங்க தான் பொன்னாடை போர்த்துவோம்.. பிளாஸ்டிக் சேர்களால் தாக்கிக் கொண்ட சிறுத்தைகள்..!

Mar 30, 2024 6:20 AM

திட்டக்குடியில் நடந்த கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில், வேட்பாளர் விஷ்ணு பிரசாதுக்கு முதலில் பொன்னாடை அணிவிப்பது யார் என்று 2 விசிக நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் மேடையிலேயே அமைச்சர் சி.வே.கணேசன் முன்னிலையில் மோதிக் கொண்டனர்.

போலீசார் சமாதனப்படுத்திய நிலையில் கூட்டத்தின் நிறைவில் விசிகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் தயா தமிழன்பன் கோஷ்டியும், தற்போதைய மாவட்ட செயலாளர் திராவிட மணி கோஷ்டியும் பிளாஸ்டிக் சேர்களால் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பிலும் விழுந்த அடியால் கடைசிவரை அவர்களில் எவரும் வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தாமல், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் நிலை ஏற்பட்டது