​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தக்காளி, பிஸ்கெட் விற்பனை செய்து வாக்குச் சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்

Published : Mar 29, 2024 8:28 PM

தக்காளி, பிஸ்கெட் விற்பனை செய்து வாக்குச் சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்

Mar 29, 2024 8:28 PM

தருமபுரி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமிமியா அன்புமணி, அரூர் சுற்றுவட்டார கிராமங்களில் பரப்புரையை தொடங்கினார்.

அவருக்கு அக்கட்சியினர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் 

திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, மக்கள் நீதி மைய்யம் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தங்கள் கட்சிக்கான சின்னம் சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக கூறினார்.

வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி மற்றும் அழிஞ்சி குப்பம் கிராமங்களில் சந்தையில் தக்காளி மற்றும் பிஸ்கட் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.