​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுதும் சூடு பிடிக்கும் பிரச்சாரம்....

Published : Mar 29, 2024 6:55 PM

தமிழகம் முழுதும் சூடு பிடிக்கும் பிரச்சாரம்....

Mar 29, 2024 6:55 PM

திமுக கூட்டணி வேட்பாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாரை ஆதரித்து, மரக்காணம் பகுதியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரசாரம் செய்தார்.

புதுவை சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் அவர் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத், வடசேரி குப்தா பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்து தனக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

தேனி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, கம்பம் வாவேர் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்த இஸ்லாமியர்களிடம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.