​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனிமம் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து

Published : Mar 29, 2024 4:09 PM

கனிமம் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து

Mar 29, 2024 4:09 PM

நாகர்கோவில் - திருநெல்வேலி சாலையில் வெள்ளமடம் பகுதியில் இன்று காலை கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதியது. பின் அருகாமையில் இருந்த வீட்டின் மதில் சுவரில் இடித்து உள்ளே இருந்த காரின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் கார், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்த நிலையில் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.