​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்

Published : Mar 29, 2024 2:37 PM

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்

Mar 29, 2024 2:37 PM

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின், தரங்கம்பாடி சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்று கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டீ போட்டு கொடுத்து, சாலை அணிவித்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து வெள்ளிமேடுபேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், டீக்கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்கு போண்டா பரிமாறி வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் வாக்கு சேகரித்தார். 

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கோரிப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.