காஸா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து, அண்டை நாடான ஜோர்டானில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.
இஸ்ரேல் தூதரகத்துக்குள் அவர்கள் நுழைந்து விடாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடாப்பட்டிருந்தது.
1994-ஆம் ஆண்டு, இஸ்ரேல் அரசுடன் ஏற்படுத்திக்கொண்ட அமைதி உடன்படிக்கை மூலம், ஜோர்டான் அரசு பாலஸ்தீன சகோதரர்களுக்கு துரோகம்இழைத்துவிட்டதாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.