கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல் அரசு என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து உத்தரமேருரில் பேசிய அவர், மின் கட்டண ரசீதைப் பார்த்தாலே ஷாக் அடிக்கும் விதத்தில் இருப்பதாகக் கூறினார்.