மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பு மனு பரிசீலனை கூட்டத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா கடந்த 7 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள போதிலும் அவரது மனு ஏற்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக அவர் கூறினார்.