கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 33 வேட்பு மனுக்களில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், அதிமுக வேட்பாளர் நசரேத் பசலியான், நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் என முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை வேட்பாளர் தியோடர் சேம் உட்பட 11 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் இத்தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.