ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புனித புதன்கிழமை சடங்குகள் கடைபிடிப்பு
Published : Mar 28, 2024 4:12 PM
ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய புதன்கிழமை அன்று பல்வேறு சடங்குகளை நடத்தினர்.
தலைநகர் கிட்டோவில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீண்ட கருப்பு அங்கிகளை அணிந்திருந்த மதகுருமார்கள், இயேசு ரத்தம் சிந்தியதை நினைவு கூறும் சடங்கில் கலந்து கொண்டனர்
தொடர்ந்து இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் வகையில் சிலுவையை சுமந்தபடி தேவலாயத்தில் மதகுருமார்கள் ஊர்வலம் சென்றனர்.