சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை அறிமுகப்படுத்தும் கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது.
கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு மாலை 4 மணிக்கே பெண்கள் அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களில் பலர், இரவு ஏழரை மணிக்கு, கார்த்தி சிதம்பரம் பேச தொடங்குவதற்கு முன்பே வீட்டிற்கு கிளம்ப தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் மண்டபத்தின் அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இரவு 8 மணி ஆகியும் கூட்டம் நிறைவடையாததால், ”வீட்டில் குழந்தைகள் அழும் கதவை திறந்துவிடுங்கள்” என அங்கிருந்த நிர்வாகிகளிடம் பெண்கள் கெஞ்சத் தொடங்கினர்.
அவர்களில் ஒரு சிலரை மட்டுமே காங்கிரஸ் நிர்வாகிகள் விடுவித்ததாக கூறப்படுகிறது.