தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் கோடம்பாக்கம் பகுதியில் பேட்டரி மின்விசிறி பொருத்திய ஆட்டோவில், சென்று வாக்குகளை சேகரித்தார்.
தன் மீது ஊழல், நில அபகரிப்பு புகார், வாரிசு அரசியல் பின்னணி இல்லை என்று குறிப்பிட்ட துண்டுச் சீட்டுகளை வழங்கி கூட்டணி கட்சியினருடன் சென்று அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.