சென்னையில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் 5 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 கிலோ தங்கம், 59 லட்சம் ரூபாய் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளை மீறி ஒட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள், பதாகைகள் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.இதுவரை 109 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்