அமெரிக்காவின் பால்ட்டிமோர் துறைமுகம் வழியாக கொழும்புவிற்கு வந்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மீது மோதியதில் பாலம் முழுவதுமாக இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
கப்பலில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்கள் உள்ளிட்ட சரக்குகளுடன் கப்பல் ஆற்றில் மூழ்கியது.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆற்றில் மூழ்கிய இரண்டு பேரை கடலோர காவல்படையினர் மீட்டிருப்பதாகவும் 8 பேரை காணவில்லை என்றும் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிபர் ஜோபைடன் கூறினார். விபத்து காரணமாக அப்பகுதியில் சரக்குப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.