தமிழ் பேச தெரியும்.. பார்த்து படிக்க தெரியாது..! நாம் தமிழர் பாய்ஸ்சால் தமிழுக்கு வந்த சோதனை
Published : Mar 26, 2024 9:45 PM
தமிழ் பேச தெரியும்.. பார்த்து படிக்க தெரியாது..! நாம் தமிழர் பாய்ஸ்சால் தமிழுக்கு வந்த சோதனை
Mar 26, 2024 9:45 PM
விருதுநகரில் வேட்புமனுதாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுசிக் தான் தமிழை பார்த்து படிக்க தெரியாமல் தவித்த ஓமன் மருத்துவர்..!
அவரது தவிப்பை அறிந்து தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வாசிக்க அதனையும் திக்கி திணறி சொன்னார் கவுசிக்..!
இறுதியில் ஆண்டவன் மீது அல்லது உளமாற என்று உறுதி கூறலாம், இதில் எதனை சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேடக உளமார என்று உறுதி மொழி ஏற்றார் கவுசிக்..!
நம்ம கவுசிக்கிற்கு சற்றும் சளைக்காமல் திருவள்ளூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரும் உறுதி மொழி பத்திரத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களை படிக்க தெரியாமல் உறுதிமொழி பத்திரத்தையே வெகு நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு ஒரு சில வார்த்தைகள் தவறாக படித்து திணறினார்
வேட்பாளரின் தமிழ் புலமையை தெரிந்து கொண்ட ஆட்சியர், உறுதிமொழி பத்திரத்தை படிக்க அதை கேட்டு ஜெகதீஷ் சந்தரும் திரும்ப சொல்லி உறுதியேற்றார்
ஊரான் பிள்ளைக்கு தமிழ் தெரியவில்லை என்றால் பிரச்சினை இல்லை, இங்கே தமிழ் வாத்தியார் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்கவே தெரியவில்லையே... என்று எதிர்கட்சியினர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.