திருவள்ளூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் வேட்புமனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தை பார்த்தபடி சிலைப்போல் சிறிது நேரம் நின்றார்.
அவர் வாசிக்க திணறியதை அடுத்து, ஆட்சியர் படிக்க அதைக்கேட்டு வரிக்குவரி அப்படியே திருப்பிக்கூறினார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜெகதீஷ் சந்தர், பதற்றம் காரணமாக அவ்வாறு நடந்துகொண்டதாகவும் செய்தியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.