மத்தியில் காங். ஆட்சிக்கு வந்தால் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் , டீசல் 65 ரூபாய், சுங்கச் சாவடி அகற்றம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நடைமுறைக்கு வருமா ? என்ற கேள்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ஆம் அல்லது இல்லை என்று நேரடியாக பதில் கூறவில்லை.
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தேர்தல் வாக்குறுதியும் இண்டியா கூட்டணியின் வாக்குறுதிதான் என்றும் , சாத்தியமில்லாதது என்று எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.