கன்னியாகுமரியில் காணாமல் போன திருவண்ணாமலை தம்பதியினரின் 6 வயது குழந்தையை போலீசார் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைந்தனர்.
வடசேரி பேருந்து நிலையத்தை சென்றடைந்த போது, தங்களது மகனை காணவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம் - தீபா தம்பதியர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் தன்னந்தனியாக தவித்துக்கொண்டிருந்த சிறுவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
மனப்பாடம் செய்து வைத்திருந்த பெற்றோரின் செல்போன் எண்ணை அச்சிறுவன் கூறியதாகவும், இதையடுத்து பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் உடனே அச்சிறுவனை பெற்றோரிடம் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.