தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரைச் சேர்ந்த கவிதா என்ற கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி அரசு கல்லூரியில் படித்து வந்த கவிதாவின் சடலம் கிருஷ்ணா நகர் ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
அவரது இன்ஸ்டா பக்கத்தில் "இன்று என்னுடைய கடைசி நாள்" என மாணவி பதிவிட்டுள்ளதை வைத்து அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.