பகுஜன் சமாஜ் கட்சி பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன், வேட்புமனுத் தாக்கலுக்கான வைப்புத் தொகை 25 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாகக் கொண்டு வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
பெரும்பாலான கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களிலேயே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர் என்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாகவும் பெஞ்சமின் கிருபாகரன் கூறினார்.