பா.ஜ.க -அ.தி.மு.க தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸ் தடியடி
Published : Mar 25, 2024 8:48 PM
பா.ஜ.க -அ.தி.மு.க தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸ் தடியடி
Mar 25, 2024 8:48 PM
நீலகிரியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் சென்ற பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், அ.தி.மு.க.வின் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு 11 முதல் 1 மணி வரையும் அவகாசம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க.வினர் சற்று தாமதமாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பா.ஜ.க.வினர் வந்தது ஏன் எனக் கேட்டு அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெளியே கூடி இருந்த இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து முழக்கமிட்டதால் போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
தடியடியை கண்டிப்பதாகக் கூறி த்து அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோரும், அ.தி.மு.கவினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.