நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் அந்தந்த தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்ராஜிடம் தனது வேட்புமனுவை அளித்தார்.
விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த போது நேரில் சந்தித்துக் கொண்ட பா.ஜ.க வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரனும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.