கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாநிதி ஜெகநாதனுடன் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி நிர்வாகிகள் அதிகமானோர் வந்ததால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் நடந்ததையடுத்து 5 வாகனங்கள் மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்தனர்.