பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளான தேனியில் தாமும், திருச்சியில் செந்தில்நாதனும் போட்டியிடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் தேனி தொகுதியில் தினகரன் பிரச்சாரத்தை துவக்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருடன் இணைந்து செயல்பட்டு தேனி மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன் என்று உறுதி அளித்தார்.