மாஸ்கோ தாக்குதலுக்கு காரணமான 4 பயங்கரவாதிகளும் உக்ரைனுக்குள் தப்பி செல்ல இருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த இசை அரங்கிற்குள், ஆயுதங்களுடன் புகுந்து 4 பேர் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்பி செல்ல முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்த புடின், இதில் தொடர்புடைய அனைவருக்கும் கொடூரமான தண்டனை விதிக்கப்படும் என்றார்.
சிரிய அதிபர் பஷர் ஆஸாதுக்கு ஆதரவாக அங்கு ரஷ்ய படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவருவதற்கு பழி வாங்குவதற்காக அந்த அமைப்பினர் இந்த தாக்குதலை அரங்கேற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.