வரும் மக்களவைத் தேர்தல் நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, இருக்காதா என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தல் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருவாரூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மக்களாட்சி, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தியாக வேண்டும் என்றார்.
டெல்லியில் போராடும் உழவர்களுக்கு எதிராக முள்வேலிகளை அமைத்து பாகிஸ்தான் பார்டரை விட மோசமான சூழலை உழவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிக்காக சல்லிக் காசை கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.