விண்ணுக்கு சென்று திரும்பிய 'புஷ்பக் விமான்' ஏவுகலன் சோதனை வெற்றி
Published : Mar 22, 2024 11:40 AM
விண்ணுக்கு சென்று திரும்பிய 'புஷ்பக் விமான்' ஏவுகலன் சோதனை வெற்றி
Mar 22, 2024 11:40 AM
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று நிலைநிறுத்தி விட்டு பத்திரமாக தரையிறங்கும் புஷ்பக் விமான் ஏவுகலனை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
புஷ்பக் விமான் என்ற பெயரிலான ஏவுகலன், இன்று காலை 7 மணிக்கு கர்நாடகாவின் சலாகரே விமானப் படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் வானில் கொண்டு செல்லப்பட்டு நான்கரை கிலோ மீட்டர் உயரத்தில் விடப்பட்டது.
அங்கிருந்து பாராசூட் மூலம் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, திட்டமிட்ட இடத்தில் விண்கலம் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்கள் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியதும் பல துண்டுகளாகி விண்வெளியில் குப்பையாக தங்கி விடும் என்ற நிலையில், மீண்டும் தரையிறங்கும் ஏவுகலன் விண்வெளித் துறையில் புதிய சகாப்தமாக அமையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது