தாய்லாந்தில் பவளப்பாறைகளை அழியாமல் காக்க விஞ்ஞானிகள் முயற்சி
Published : Mar 22, 2024 10:39 AM
கடலுக்கு அடியில் பவளப் பாறைகள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் நோக்கில், தாய்லாந்து கடற்கரையோர கடலுக்குள் பவள படிமங்கள் வெளியிடும் முட்டைகள் மற்றும் உயிரணுக்களை சேகரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பவளப் படிமங்கள் முட்டைகள் மற்றும் உயிரணுக்களை வெளியிடும் சீசன் என்பதால் உள்நீச்சல் வீரர்களை கடலுக்குள் 10 அடி ஆழத்திற்கு அனுப்பி சேகரித்து வருகின்றனர்.
கடலின் வெப்பநிலை மற்றும் மாசு அதிகரிப்பால் பவளப்பாறைகள் இயற்கையாக வளராமல் போய் விடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே, 72 மணி நேரத்திற்குள் முட்டை மற்றும் உயிரணுக்களை ஒன்றிணைத்து ஆய்வகத்தில் குறிப்பிட்ட காலம் வளரச் செய்து மீண்டும் கடலுக்குள் விட தாய்லாந்து விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.