மயிலாடுதுறையில் தலித் இளைஞர் அஜித்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட வன்னியர் சங்க பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியது காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதன் இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை அஜித்குமார் உடலை பெறாமல் அவர் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்